தமிழகம்

கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் சைபர் கிரைம் ஏ டி எஸ் பி பாஸ்கரன் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

126views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பிவீ அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் ஏ டி எஸ் பி பாஸ்கரன் கலந்து கொண்டு மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக கீழக்கரை தாசிம் பிவீ அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமையா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் எம் எஸ் இர்ஃபான் அஹமது. மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் எஸ் ஐ திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சைபர் க்ரைம் ஏ டி எஸ் பி பேசும்போது தெரியாத எண்களில் இருந்து வரும் உங்கள் ஆசையை தூண்டும் அழைப்புகளை ஏற்று அவர்களிடம் நெருக்கமாக பழகுவதோ தனிப்பட்ட விவரங்களை பகிர்வதோ அல்லது பண பரிவர்த்தனையில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். குறுகிய காலத்தில் உங்கள் பணம் இரட்டடிப்பாகும் என்ற பொய்யான வாக்குறுதியை அளிக்கும் ஆஃப்களில் முதலீடு செய்வது தவிர்க்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் உங்களிடம் நண்பர்களாக அறிமுகம் ஆகி வீடியோ காலில் ஒருபோதும் பெண்கள் பேச வேண்டாம். அப்படி பேசும்போது உங்களை தவறாக சித்தரித்து உறவினர்களுக்கோ சோசியல் மீடியாவிலோ அனுப்பி விடுவோம் என மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் பணத்தை ஆன்லைனில் இழந்திருந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் பணத்தை மீட்கலாம் என்றார்.
செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!