தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 7 நாள் சிறப்பு முகாம்

55views
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் பானுமதி முருகவேல் ஊராட்சி மன்ற செயலாளர் பொன்மணி ஆகியோர் முன்னனிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கீழத்தூவல் காவல்நிலைய ஆய்வாளர் திரு எஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

 

பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என நவ நாகரிக காலத்தில் காலனும் வடிவங்கள் வேறாய் மாறி வந்து நம்மை வா என்று கைநீட்டி அழைப்பான் நாம் போதைப் பொருளைக் கை பிடித்தால் அது நம் கைப்பற்றிக் கொண்டு விடவே விடாது’ தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்தே செய்வது தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியே ஆகணும் நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொள்ளும் போதைப் பழக்கத்தை விட்டொழிப்போம்! நம் தனித் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து இத் தரணியில் சிறந்த மனிதனாய் வாழ்ந்திடுவோம்! என்று உரையாற்றி, மாணவர்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
ஊர் பொது மக்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வெங்கலக்குறிச்சி கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்று பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.  நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் ஒருங்கிணைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!