தமிழகம்

நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ

309views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணி திட்டம் மூலம் டி இ எல் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒவ்வொரு ஊர்களாகச் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோளை பற்றி எடுத்துரைக்கும் வகையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை எம்எல்ஏ ஐயப்பன் தொடங்கி வைத்தார்.
இதில் ஒவ்வொரு ஊர்களுக்கும் முகாம் அமைத்து மாணவிகள் மக்கும் குப்பை மக்காத குப்பை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகித்தால் எவ்வாறு விளைவுகள் ஏற்படும் என்பதும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுத்து விட்டு மஞ்சள் பை உபயோகிக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். இதில் நல்லதேவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா லிங்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் கிளைச் செயலாளர்கள் கூழு உயர்நான் பிரபு தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சேடப்பட்டி சேர்ந்த ஐயர் மற்றும் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!