தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) இலவச பயிற்சி வகுப்பு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

261views
செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தலைசிறந்த கல்வியாளர்களால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகள் அனைத்தையும் நல்நூலகர் இராமசாமி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அரசு பொது நூலகத்தில் தேசிய திறனாய்வு (NMMS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு டிச.26 திங்கட்கிழமை துவங்கியது.
இதன் தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். ஜே.பி கல்வியியல் கல்லூரி மாணவிகள் பயிற்சி வகுப்பை நடத்தினர். எல்.என். சேரிட்ரபிள் டிரஸ்ட் இயக்குனர் நீலகண்டன், ஆகாஷ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், ஆசிரியர் சித்தாய், ஜே.பி கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, எஸ்.எம்.எஸ்.எஸ் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் வரவேற்றார். நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து 122 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர். மேலும் தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) க்கான இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் டிச. 31 வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் நடைபெற உள்ளது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!