தமிழகம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய பென்ஷன் GP Fதிட்டத்தை அமல்படுத்த கோரி 13 அரசு ஊழியர்கள் நடைபயணம் – சென்றவர்களை கைது செய்த திருநகர் போலீஸார்.

321views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து இன்று காலை அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமையில் 13 பேர் 2வது நாளாக நடைபயணம் துவங்கினர்.
முதல் நாளான நேற்று கள்ளிக்குடியிருந்து துவங்கி திருமங்கலத்தில் நிறைவுபெற்றது.
2வது நாள் தனக்கன் குளத்தில்ளுள்ள வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்த திருப்பரங்குன்றம் நோக்கி நடைபயணம் செல்லும்போது இது குறித்து தகவல் அறிந்து வந்த திருநகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீஸார் நடை யணம் செல்லக்கூடாது என கூறினர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த CPS ஒழிப்பு நடைபயண குழுவினர் கடத்த 10 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையரிடமும் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது..இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் நேற்று நடைபயணம் துவங்கினோம் இன்று 2வது நாளாக நடைபயணம் செல்ல தடை விதிப்பது ஏன் என கூறினார்.
இதனையடுத்து காவல்துறையினர் 13 பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!