தமிழகம்

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நெல்லை மாணவி; எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து

86views
“சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்” எனும் தலைப்பில் இந்திய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் கட்டுரை எழுதி முதலிடத்தை பிடித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நெல்லை மாணவி ஹிஸானாவுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் “சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்” என்ற தலைப்பில் இந்திய அளவில் கட்டுரை போட்டிகளை நடத்தியது. இந்தியாவை எல்லா வகையிலும் வளமான நாடாக மாற்றுவதற்கு இளம் தலைமுறையினரிடம் இருந்து கட்டுரை மூலம் யோசனைகள் பெறப்பட்டன.
இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 7,500 கல்வி நிறுவனங்கள், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 13 மொழிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. 2019-2020ம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட நெல்லையை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஹிஸானா தமிழ் மொழியில் கட்டுரை எழுதி இந்திய அளவில் சீனியர் கேட்டகிரியில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு கடந்த ஏப்.17 அன்று இந்திய குடியரசு தலைவர் தலைமையில் டெல்லியில் நடந்த விழாவில், விருது மற்றும், பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்போது எனது மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் 3ஆம் ஆண்டு கணினி அறிவியல் பிரிவில் படித்து வருகிறார் மாணவி ஹிஸானா. நெல்லையை சேர்ந்த மாணவி ஹிஸானா தமிழ் மொழியில் தேர்வெழுதி விருதைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழுக்கு, தமிழகத்திற்கு, நெல்லை மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி ஹிஸானாவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நெல்லை முபாரக் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!