தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா தகவல்

119views
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டில் கலைஞர் தமிழ் -100 பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடைபெற உள்ளதாக கவிஞர் பேரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கலைஞர் தமிழ்- 100” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் ஒன்றினை பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஜூன்- 7 புதன் கிழமை அன்று பாளையங்கோட்டை பகுதியில் நடத்துகிறது. இந்த நிகழ்வு பாளையங்கோட்டை வ. உ. சி. மைதானம் பின்புறம் அமைந்துள்ள ஐயம்பெருமாள் அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
ஜூன்-07 காலை 10.00 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா வரவேற்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, ஆய்வுக் கோவை வெளியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு விருதுகளை வழங்கி பேருரை ஆற்றுகிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் இணைய தளத்தினை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் தொடங்கி வைக்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்துல் வஹாப் பாளையங்கோட்டை, நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி, மருத்துவர் சதன் திருமலைக் குமார் வாசுதேவநல்லூர், எஸ். பழனி நாடார் தென்காசி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்நிகழ்வில் தொடர்ந்து தமிழறிஞர்கள் முனைவர் ந. அருள், கவிஞர் நெல்லை ஜெயந்தா, மருத்துவர் பிரேமச்சந்திரன், மருத்துவர் ப. ஆதம் ஷேக் அலி, மருத்துவர் ச. இராஜேஸ்வரி, முதுமுனைவர் பா. வளன் அரசு, சமூக ஆர்வலர் எஸ். மில்லத் இஸ்மாயில், எழுத்தாளர் செ. திவான், கவிஞர் பாமணி, சிங்கப்பூர் கவிஞர் கலைவாணி இளங்கோ ஆகியோர்களுக்கு “கலைஞர் தமிழ்”என்ற விருதினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்குகிறார்.
தொடர்ந்து “கலைஞர் தமிழ்-100” என்ற தலைப்பில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு நெல்லை கவிஞர் ஜெயந்தா நெறியாளராக இருந்து நிகழ்ச்சியை நடத்திச் செல்கிறார். முனைவர் இராஜ. மதிவாணன் முன்னிலை வகிக்க, பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் தொடக்க உரை ஆற்றுகிறார். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தரும் கவிஞர்கள் “கலைஞர் தமிழ்-100 “என்ற தலைப்பில் கவிதை வாசிக்கிறார்கள். நிகழ்ச்சியில் தொடர்ந்து பிற்பகல் கருத்தரங்கின் முதல் அமர்வுக்கு தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க. சுப்புலட்சுமி தலைமையேற்க தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதினைப் பெற்ற எடப்பாடி ஆ. அழகேசன் முன்னிலை வகிக்கிறார். இரண்டாவது அமர்விற்கு திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ம. கவிதா தலைமை ஏற்க, நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.நி.ஸ்ரீகலா முன்னிலை வகிக்கிறார். மூன்றாவது அமர்வாக பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து பாலா தலைமையேற்க, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.சொர்ண பமிலா முன்னிலை வகிக்கிறார். மூன்று அமர்வுகளிலும் கருத்தாளர்கள் தங்களது கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள். மாலை 5.00 மணிக்கு கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி தொடங்குகிறது.

நிறைவு நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் பா. இராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்குகிறார். கோவில்பட்டி முத்து முருகன் முன்னிலை வகிக்கிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா நிறைவுரை ஆற்றுகிறார். நல் நூலகர் முனைவர் அ. முத்துகிருஷ்ணன் மற்றும் ஓவியர் பொன்வள்ளி ஆகியோர் தீர்மானங்களை வாசிக்கின்றனர். திருக்குறள் இரா. முருகன் நன்றி உரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவுநர் கவிஞர் பேரா என்ற பே. இராஜேந்திரன் விரிவாக செய்து வருகிறார். அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கவிஞர் பேரா அழைப்பு விடுத்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!