தமிழகம்

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

170views
நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா நடந்தது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு ஈஸ்ட் கோஷ்டு நிர்வாகிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு ஈஸ்ட் கோஷ்டும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, பாரதியார் ஓவியப்போட்டி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு “சரித்திர தேர்ச்சி கொள்” என்கிற தலைப்பில் கவிதை போட்டி ஆகியன நடத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னதாக நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி பாரதியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து போட்டிகளை துவங்கி வைத்தார். இப்போட்டிகளில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் சாய் ரக்சன்யா ஹர்ஷிதா, ஜோஸ்வினி, நித்திகா ,நேகா, சுகந்தன் ஆகிய பள்ளி மாணவ மாணவிகளும், பாரதியார் ஓவியப் போட்டியில் கார்த்திக் சுப்பிரமணியன், சிவ மஹா, ஹிர்தீஸ் பாத்தியா ஹிமாஷ் நாதன் ,மகிமா ஆகிய பள்ளி மாணவ மாணவிகளும், ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவி நந்தினி, தூய சவேரியர் கல்லூரி மாணவர் அண்ணாமலை, தூயசவேரியார் கல்வியியல் கல்லூரி மாணவர் ஜெனி விமல் நவீன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் ஜெயபாண்டி, ராணி அண்ணா கல்லூரி மாணவி சந்தியா ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை தொழிலதிபர் வழக்கறிஞர் டி. முருகப்பன், கீழநத்தம் பஞ்சாயத்து பத்தாவது வார்டு கவுன்சிலர் பூர்ணிமா, ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் ஜான் பிரகாஷ், ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உதவி பேராசிரியை பிரியதர்ஷினி, தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் சுப்பிரமணியம், கலை ஆசிரியை சொர்ணம், கவின் கலை ஆசிரியர் கார்தீஸ்வரி, கவிஞர். சுப்பையா, ஓவியர். தங்கவேல் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!