தமிழகம்

நெல்லை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு

110views
திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 இரு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் வைத்து 24.04.2023-ம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 21.04.2023 மற்றும் 22.04.2023-ம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முன்னீர்பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே இரு சக்கர வாகனத்திற்கு ரூ.2,000/- முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வரவேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகையை மற்றும் அரசால் விதிக்கப்படும் ஜீ.எஸ்.டி. வரி சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!