தமிழகம்

ஏர்வாடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

136views
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 30,000முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஊராட்சிக்கு உட்பட்டு 15வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெவிக்காமல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள 15 பெண்களை ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து எவ்வித காரணங்களும் சொல்லாமல் நோட்டில் கையெழுத்து பெற்று கிராம சபை கூட்டத்தை நடத்தி முடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுகையில், ஏர்வாடி ஆரம்ப சுகாதாரம் அருகே 15 பெண்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது நாங்கள் விசாரித்தோம் விசாரிக்கும் பொழுது கிராம சபை கூட்டம் நடந்து முடிந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார். உடனே பொதுமக்கள் இல்லாமல் எவ்வித கோரிக்கைகள் வைக்காமல் கூட்டம் எப்படி நடந்தது யாருக்கு நீங்கள் தகவல் கொடுத்தீர்கள் யார் யார் கலந்து கொண்டாள் என்ற கேள்விகள் எழுப்பினோம் எங்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் உதாசீனப்படுத்தி கொண்டு சென்று விட்டார்.
மேலும் அங்கு நின்று கொண்டு இருந்தது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள 15 பெண்களை அழைத்து கேள்வி கேட்டோம் அப்பொழுது அவர்கள் கூறுகையில் எங்களை ஊராட்சி மன்ற தலைவர் அழைத்து நோட்டில் கையொப்பம் வாங்கினார் மற்றபடி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். கிராம சபை கூட்டம் முறையாக நடக்காததால் மாவட்ட கலெக்டர் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!