தமிழகம்

நாகர்கோவில் நடைபெற்ற ‘ கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் ‘ நிகழ்ச்சி

161views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வில்லுக்குறி டவுன் பஞ்சாயத்து தோட்டிகோடு பகுதியில் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் சேவைக்கு துவங்கப்பட உள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நாகர்கோவில் ஹோட்டல் லான்சி இன்டர்நேஷனலில் நடந்த கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரியில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல மருத்துவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் எம்.ஐ . சகாதுல்லா அவர்களிடம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டவரும் முழு கொரோனா ஊரடங்கு நேரத்திலும் நோயாளிகளுக்கு தொடர் மருத்துவ சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்ல போக்குவரத்து வசதி செய்து கொடுத்தவருமான சமூக சேவகர்- பசுமை நாயகன் மரு .தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ) நாகர்கோவிலில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனையானது சாமானிய மக்களும் எளிதில் அணுகும் வண்ணமும் பிற மருத்துவர்களுக்கு பலமாகவும் இந்தப் பகுதி மக்களுக்கு எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்கின்ற உலகத்தரம் வாய்ந்த மையமாக திகழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
உடன் கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வு நடத்துவதற்கு உதவிய முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறுவை சிகிச்சை நிபுணர் இராதாகிருஷ்ணன் அவர்களும் நாகர்கோயில் பகுதியில் கொரோனா நிவாரணப் பணிகளில் இணைந்து பணி செய்த மருத்துவர் பெர்லிங்டன் அவர்களும் கன்னியாகுமரி ஒய். எம். சி. ஏ மையத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் ரோட்டரி கவர்னராக இருக்கும் போது கலந்து கொண்டு சிறப்பு செய்த ரொட்டேரியன் ஷேக் சலீம் ஆகியோரையும் காண முடிந்தது.
கிம்ஸ் ஹெல்த் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் எம் .ஐ.சகாதுல்லா அவர்கள் கூறுகையில், ‘கிங்ஸ் மருத்துவமனையானது உலகத்தரமாய்ந்த சிறப்புகளை உள்ளடக்கி அனைத்து பிரிவுகளோடு எல்லா நேரமும் மக்களுக்கு சேவையாற்றும். அனைத்து தரப்பட்ட மக்களும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற நடைமுறையில் அமைந்துள்ளது. மக்களுக்கு தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு பிற மருத்துவர்களுக்கும் இம் மருத்துவமனை உறுதுணையாக இருக்கும் என்றார்.
பின்னர் குழுமத்தை சேர்ந்த மருத்துவர்கள் நவீன மருத்துவ சிகிச்சை பற்றி விளக்க உரை அளித்தனர். அனைத்து ஏற்பாடுகளையும் கிங்ஸ் நிர்வாகம் செய்திருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!