தமிழகம்

நாகர்கோவில், ஏலகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமை குறித்த மாணவர்களுடன் நடைப்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி

16views
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி ஏலகரம் – வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் சிறப்பும், திருக்குறளின் பெருமையையும் மாணவர்களுடன் கலந்து உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் செல்வி. ந. ராஜதங்கம் தலைமை ஏற்றார். உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். சமூகசேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். திருவள்ளுவரின் பெருமையையும் திருக்குறள் வாயிலாக நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநைனார் குறிச்சியில் பிறந்த திருவள்ளுவரின் திருஉருவ சிலையை கன்னியாகுமரி கடலில் நிறுவி -25 வருடம் நிறைவை முன்னிட்டு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழக அரசையும், கலந்து கொள்ள இருக்கும் தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் இதர தமிழ் அறிஞர்களையும் முக்கிய பிரமுகர்களையும் இதை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்ற கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தையும் ஆட்சியரையும் வணங்கி வரவேற்கின்றோம் என்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசும் , மரக்கன்றுகள் மற்றும் திருக்குறள் நூலும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களோடு இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.  நிகழ்ச்சியில் ஜே .ஆர் .சி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திரு..ஜார்ஜ் திருமதி .லதா, லீமா ரோஸ், எஃ பி , சாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!