தமிழகம்

கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69′-ஆவது ஆண்டு விழா

111views
கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த 69′-ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருத்தமிழக இணைப்பு போராட்ட வீரர்கள் சங்கம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ .உ .சிதம்பரனார் தேசிய பேரவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலைவாணர், ஜீவானந்தம், கவிமணி, முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணாதுரை , எம்.ஜி.ஆர், தியாகி குஞ்ச நாடார், ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சர்.சி. பி. ராமசாமி ஐயர் 60-வது வருட நினைவுப் பூங்கா அருகாமையில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருத்தமிழக இணைப்பு போராட்ட வீரர்கள் சங்கத் தலைவர் தியாகி. கோ. முத்து கருப்பன் தலைமை வகிக்க, கப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் தேசிய பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர். தி. கோ .நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
வழக்கறிஞர். இராதாகிருஷ்ணன், துவரங்காடு செண்பக சேகர பிள்ளை, இல. பகவதி பெருமாள், கோபாலகிருஷ்ணன், தவசிமுத்து , இனியன் தம்பி, ரொட்டேரியன் செல்வகுமார் , முத்துக்குமார், சேகர் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!