தமிழகம்

பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

74views
மதுரையில் சொந்த பயன்பாட்டில் இருக்கும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் அவர்களே  ஆன்லைனில் புக் செய்து பைக் டாக்ஸி நகர் வரும்போது அவர்களது வாகனங்களை பிடித்து தற்போது மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலரிடம் சுமார் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை ஒப்படைத்து வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர் இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில், பைக் கால் டாக்ஸி பயன்படுத்துவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உடன் நாங்கள் ஆட்டோவுக்கு எப்சி ரோட் டாக்ஸ் இன்சூரன்ஸ் உள்ளிட்டவர்கள் கட்டி வாடகைக்கு வாகனமாக இயக்கி வருகிறோம் இவர்கள் சொந்த வாகனத்திற்கு பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி எந்தவித பாதுகாப்பு அம்சம் இல்லாமல் பயணிகளை ஏற்றி செல்வதால் பாதுகாப்புகள் அற்ற சூழல் ஏற்படுகிறது மேலும் விபத்து ஏற்பட்டால் அரசாங்கம் பதில் சொல்லுமா என கேள்வியும் முன் வைக்கிறோம் என தெரிவித்தார் செல்வதால் அரசுக்கு மேலும் இதனால் அரசுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பும் ஏற்படுவதாகவும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய வாகனத்தை இவர்கள் வாகன வாகனமாக பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும் இதை உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!