தமிழகம்

சென்னை மண்டல MSF சார்பாக பயிலரங்கம் நடத்துதல் – MSF ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

21views
07/09/2024 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் முஸ்லிம் மாணவர் பேரவை -MSF சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் முஸ்லிம் லீக் தேசிய தலைமையகம் மண்ணடி சென்னையில் MSF மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர் நூர் முஹம்மது தலைமையில், MSF சென்னை மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சென்னை புதுக்கல்லூரி மாணவன் முகமது இர்ஷாத் இறைவசனம் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார். MSF மாநிலத் துணைத் தலைவர் சென்னை ஜி.ரஹீம் பாஷா வரவேற்புரை ஆற்றினார்,
இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் EX.MLA, முஸ்லிம் லீக் மாநில செயலாளர் இப்ராஹிம் மக்கி, MSF தேசிய இணைச் செயலாளர் வழக்கறிஞர் அபூபக்கர் ரஸ்வி பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
1- MSF மாவட்ட ரீதியாக சீர் செய்தல்,
2 – மாவட்டம் மற்றும் கல்லூரிகளில் MSF உறுப்பினர்களை அதிகரித்தல்,
3 -சென்னை மண்டல MSF சார்பாக பயிலரங்கம் நடத்துதல்,
4 – MSF மாநில தலைமை நடத்தக்கூடிய மீலாது விழா போட்டிகளில் மாவட்ட MSF சார்பாக ஒத்துழைப்பு மற்றும் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க செய்தல்,
5 -போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டை அதிகளவில் முன்னெடுத்தல்,
6-சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவர்களின் மத்தியில் மூடநம்பிக்கை விதைக்கும் விதமாக பேசி சர்ச்சை ஏற்படுத்திய மகாவிஷ்ணு என்பவருக்கு எதிராக இக்கூட்டம் அழுத்தமான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
மேலும் இக்கூட்டத்தில் MSF சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முகப்பேர் உசேன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அப்ரோஸ் கான், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சதாம் உசேன், துணைச் செயலாளர் திசையில் ஷெரீப், நகர நிர்வாகிகள் சபீர், தஸ்தகீர்,ஆரிப், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஷேக், ஷெரிஃப்,இப்ராஹிம்,
தென் சென்னை மாவட்ட தலைவர் சல்மான் பாஷா, செயலாளர் கலீஃபத்துல்லா மற்றும் பொறுப்பாளர்கள் அகமது பேக், முகமது காசிம், வாணியம்பாடி மாவட்ட அமைப்பாளர் முகமது நவுமான், எஸ்.ஆர்.எம் கல்லூரி சாகிப், சென்னை புதுக் கல்லூரி MSF சார்பில் தலைவர் ஜமாலுதீன் ரையான், செயலாளர் ஈஸா லப்பை, துணை செயலாளர் ஆதில் இர்ஃபான் மற்றும் பொறுப்பாளர்கள் அபூபக்கர் சித்திக்,முகமது இர்ஷாத், முகமது அமீர், முகமது சாஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!