தமிழகம்

எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரியில் நூலக வாரவிழா

133views
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரியில் நூலக வார விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி தலைமை வகித்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியை என்.முருகேஸ்வரி வரவேற்றார்.
கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியை. எஸ்.கனி பரிசு வழங்கினார். நூலக வார விழா நோக்கம் குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் கே.சி.முத்து, நூலக சிறப்புகள் குறித்து இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜே.வியோன் பேசினர்.
கல்லூரி துணை முதல்வர் ஜெ.கவிதா வாழ்த்துரை வழங்கினார். கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியர் நூலக மாதிரிகளை செய்து விளக்கமளித்தனர். உதவி பேராசிரியர்கள் ரா.கிருஷ்ணமூர்த்தி, எம்.கூரிராஜ், கே.சேதுராஜ் பாண்டியன். எ.புஷ்பரதி, உடற்கல்வி இயக்குநர் பா.சுரேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். நூலகர் எஸ்.செந்தில் கணேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!