தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை ! அடையார் ஆனந்த பவன் ஏற்பாடு !!

36views
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நறுவீ தலைவர் ஜி.வி.சம்பத், அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூரில் இயங்கி வரும் நரு வீ மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 15 வயதுள்ள ஏழை 10 சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதன் முழு செலவை அடையார் ஆனந்த பவன் ஏற்றுக் கொள்ளும், நருவீ இருதய அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் பால் செல்வம் கைபேசியில் (8754047796) தொடர்பு கொண்டு பயன்பெறும் படிகேட்டுக் கொண்டு உள்ளனர்.
உடன் துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால்ஹென்றி, டாக்டர் அரவிந்த் நாயர், கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொதுமேலாளர் நித்தின் சம்பத், அபிராமி நித்தின் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!