தமிழகம்

ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்

142views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேல தெருக்கரை வீதியில் உள்ள ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவ சமாதாலயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இலவச இருதய பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், நீரழிவு விழித்திரை நோய் பரிசோதனை, கண் புரை நோய் பரிசோதனை, கண் பார்வை குறைபாடு பரிசோதனை, கண் அழுத்த நோய் பரிசோதனை, நாள்பட்ட வியாதிகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மனோவியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் சிகிச்சை நடைபெற்றது.

ஸ்ரீமத் பத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் இறை நாமம் பாட திரு.என்.காமராஜ் சிவந்தி ஆதித்தனார் கலைக் கல்லூரி தலைவர் முன்னிலை வகிக்க மருத்துவ முகாமை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்த் ஸ்ரீ மஹராஜ் தொடங்கி வைத்தார். திருமதி ஜான்சி ராணி, மருத்துவர் பிரேசிலா கிறிஸ்டி, மருத்துவர் அருணாச்சலம் ,மருத்துவர் ஆர். டி. ஹரிஷ் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி சிறப்பித்தனர்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமை சமூக சேவகர் மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ( கிருஷ்ணன் கோவில் பகுதியில் முழு ஊரடங்கு நேரத்தில் பல்வேறு நிவாரண பணிகளை எந்த வேறுபாடும் இன்றி செய்தவர் ) தலைமை தாங்கி நடத்தினார்.

மதியம் சமபந்தியை எம்.ஆர். காந்தி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுவாமி நிஜானந்தா அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார் . மருத்துவ முகாமில் பங்கெடுத்த மருத்துவர்களையும் சான்றோர்களையும் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு செய்தனர். வள்ளலார் கூற்றுக்கு இணங்க நற் சிந்தையுடன் உடல்நலம் பேணி பொதுமக்கள் இளைப்பாற செய்த பயனுள்ள வைபவத்தை ஸ்ரீமத் பத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் திரு ஜெகதீஷ், செல்வகேசவன், காளியப்பன், ராஜா, மணிகண்டன், சிவகுமார் ,விஜின் , விஜயராஜா, பாக்கியகுமார், மெர்சி , ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!