தமிழகம்

சமுதாய புரவலர் பிளாக் துளிப் முஹமது எஹியா அவர்களின் இல்ல மணவிழா

14views
சமுதாய புரவலர் பிளாக் துளிப் அதிபர் நடுக்கடை முஹமது எஹியா அவர்களின் சகோதரர் மைதீன் பாட்சா அவர்களின் புதல்வர் சையது இப்ராஹிம் மணமகனுக்கும், தென்காசி அச்சன்புதூர் மகுது மீரான் அவர்களின் புதல்வி ஆபிதா பர்வீன் மணமகளுக்கும் தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகத்தில் இன்று (30-12-2024) திருமணம் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மணவிழாவில். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் இலங்கை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள், தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பி அவர்கள், மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், அமீரக காயிதே மில்லத் பேரவை துணை தலைவர் திருப்பனந்தாள் தாஹா, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயினுலாபுதீன், தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, மாணவரணி தேசிய துணை தலைவர் புளியங்குடி அல் அமீன், மாணவரணி மாநில தலைவர் திருச்சி அன்சார், மணிச்சுடர் நாளிதழ் மூத்த நிருபர் ஷாஹுல் ஹமீது உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமுதாய புரவலர்கள், உலமா பெருமக்கள், வட்டார ஜமாஅத் நிர்வாகிகள், மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத் தார்கள், சகோதர சமுதாய பெருமக்கள், திரை பிரபலங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!