தமிழகம்

நகைச்சுவை நடிகர் மனோபாலா மரணம்

50views
திரைத்துறை பிரபலம் திரு.மனோபாலா அவர்கள் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலாவுக்கு ஜனவரி மாதத்தில் ஆஞ்சியோ சிகிச்சை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.  வீட்டில் ஓய்வில் இருந்தவரை இன்று இயற்கை தன்னோடு அரவணைத்துக் கொண்டது.
இன்றைய இளைஞர்களுக்கு நகைச்சுவை நடிகராக மட்டும் மனோபாலாவை அறிந்திப்பர். அவர் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர்.  1979ல் திரைத்துறையில் பாரதிராஜாவின் உதவியாளராக தன் பயணத்தை தொடங்கியவர், தன் முதல் படமான ஆகாய கங்கை மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.  அதன் பிறகு சிறந்த இயக்குகராக வலம் வந்த திரு.மனோபாலா, ரஜினியின் ஊர்க்காவலன் திரைப்படம் மூலம் மிக பிரபலமானார். நாற்பது படங்களுக்கு மேல் இயக்குநராக பணியாற்றிய திரு.மனோபாலா, ஹச். வினோத் இயக்கிய                  “சதுரங்க வேட்டை” படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக ஐநூறு படங்களுக்கும் மேல் நடித்த நடிகர்.
சமீபகாலமாக நகைச்சுவை நடிகர்களின் அடுத்தடுத்த மறைவு திரைத்துறையினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

https://www.youtube.com/watch?v=kjPo_K5CV-Y

ஈரோடு கௌரிஷங்கர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!