தமிழகம்

மஞ்சப்பையில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் அழைப்பிதழ்

586views
மதுரை, மாணவர்களிடம் மஞ்சப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, என்.எஸ்.எஸ் சிறப்பு முகாமின் அழைப்பிதழை மஞ்சப்பையில் பதிவிட்டு வழங்கியுள்ளார், அல்அமீன் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நூருல்லாஹ். இது அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

23.11.22 முதல் 29.11.22 வரை மதுரை, ஒத்தக்கடையில் உள்ள தேத்தான்குளத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், களப்பணிகள், மரக்கன்று நடுதல், இலவச மருத்துவ முகாம் போற்றவை செய்தனர். முகாமினை பார்வையிட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா அவர்கள் மஞ்சப்பை விழிப்புணர்வை பாராட்டி, பொதுமக்களுக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

மேலும் தொடர்பு அலுவலர்கள் ராஜ்குமார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பு முகாமை பார்வையிட்டு வாழ்த்து கூறினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!