தமிழகம்

மதுரை, புதூர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை திறந்து வைத்த காவல் ஆணையர்

56views
மதுரை புதூர் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்த பகுதியில் வணிகர்கள் பங்களிப்புடன் சிசிடிவி கேமரா வைக்க மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் ஆலோசனையின் பெயரில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று புதூர் ஐடிஐ, லூர்து நகர், ஐயப்பன் கோவில், மூன்று மாடி, சர்வேயர் காலனி சந்திப்பு, மாட்டுத்தாவணி சாலை பகுதிகளில் மொத்தம் 64 சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு அவற்றைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை புதூர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா மற்றும் கண்காணிக்கும் அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர், துணை ஆணையர் (வடக்கு) அரவிந்த், உதவி ஆணையர் (அண்ணா நகர்)சூரக்குமார்
ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புதூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி மற்றும் காவலர்கள், வணிகர்கள், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!