தமிழகம்

வாடிக்கையாளர் கொண்டு வந்த அட்டைப்பெட்டிக்குள் பாம்பு சற்றும் பதறாமல் அடிக்காமல் பத்திரமாக வெளியே அனுப்பிய ஊழியர்கள் அடிக்கச் சொல்லி வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அடிக்க மறுத்த ஊழியர்கள்

112views
மதுரை நேரு நகர் பைபாஸ் சாலையில் தனியார் டயர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் அவர் வாகனத்தில் இருந்து பழைய இரும்பு சக்கரத்தை கழட்டிவிட்டு அவர் கொண்டு வந்த புதிய இரும்பு சக்கரத்தை மாற்றுவதற்கு வாகனத்தை மேலே ஏற்றினார்.  அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பெட்டியை ஒன்றன்பின் ஒன்றாக இறக்கவே கடைசியாக இறக்கப்பட்ட பெட்டியில் சத்தம் கேட்டுள்ளது.  இதை கண்ட ஊழியர்கள் என்ன இந்த பெட்டியில் இருந்து சத்தம் வருகிறது என பார்த்த பொழுது அதில் சுமார் மூன்று அடி உள்ள நல்ல பாம்பு கண்ட ஊழியர்கள் அந்த அட்டைப்பெட்டியை மெதுவாக கடையிலிருந்து வெளியே கொண்டு வந்து அதில் இருந்த இரும்பு சக்கரத்தை மெதுவாக வெளியே எடுத்தார்கள்.  பின் அட்டைப் பெட்டி இடுக்குக்குள் அந்தப் பாம்பு தனது நாக்கை மட்டும் வெளியே நீட்டி சத்தம் போட்டது.
எனினும் அந்த ஊழியர்கள் பாம்பை பத்திரமாக வெளியேற்றும் நோக்கத்திலேயே இருந்தார்கள்.   பொதுமக்கள் அந்த அட்டைப்பெட்டியுடன் பாம்பை அடியுங்கள் அடியுங்கள் என சொன்னாலும் அங்கு இருக்கும் ஊழியர்கள் பாம்பை நாங்கள் எக்காரணத்தை கொண்டும் அடிக்க மாட்டோம்.   அதுவும் உயிரினம் தான் என சொல்லி அந்த பாம்பை பத்திரமாக வெளியே செல்வதற்கான வழிமுறைகளை கையாள பாம்பு பத்திரமாக வெளியே அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.   அங்கிருந்த பொதுமக்கள் ஏன் பாம்பை அடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதன் வாழ்விடத்தில் நாம் வாழ்கிறோம். அது ஒரு உயிரினம். அதை அடிப்பதால் நமக்கு என்ன பயன்? அது இருப்பதால் நமக்கு பலனே  விவசாயிகளின் நண்பனே என ஊழியர்கள் சொன்னது அங்குள்ள பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  சுமார் 20 நிமிடம் நேரு நகர் பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!