தமிழகம்

நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – போர்க்கால நடவடிக்கை எடுத்து கண்மாயை தூய்மைபடுத்த விவசாயிகள் கோரிக்கை

76views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள நிலையூர் கால்வாய் பழமை வாய்ந்த கண்மாயாகும். இக்கால்வாய் மேலக்கால் பகுதியிலிருந்துநிலையூர் கம்பிக்குடி வரை அமைந்துள்ளதால் நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் எனப்பெயர் உள்ளது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால்வாய் செல்லும் பாதையான சந்திராபாளையம், தேவி நகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பை கூளங்களும் நிரம்பியதுடன், கழிவு நீர் கலந்து கால்வாய் முழுவதும் பாசனம் அடைந்து , பச்சை போர்வை போர்த்தியது போன்று கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலைக்கு உள்ளது.

கண்மாயைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், செவிசாய்க்கவில்லை என கூறும் அப்பகுதிவாசிகள் , போர்க்கால நடவடிக்கையில் அரசு நடவடிக்கை எடுத்து , மர்ம நோய் தாக்குவதற்கு முன் கண்மாயை தூய்மைப்படுத்தி, சீரமைக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!