தமிழகம்

மதுரை.சோழவந்தானில் பாசன கால்வாயை தூர்வாராததால் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை

83views
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கு.முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் மூன்று போகம் நெல் விளையும் பகுதி. மதுரை மாவட்டத்தின் “தஞ்சை”, உணவு களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தற்போது பொதுப்பணித்துறை துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பாசன கால்வாய் தூர் வாரப்படாமல் விவசாய நிலங்கள் தரிசாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சோழவந்தானில் உள்ளவடகரைக் கண்மாயில் இருந்து வைகை ஆறு வரை வரும் 40 அடி கால்வாய் முற்றிலுமாக தூர்ந்து போய் உள்ளதால் அதனை முறையாக தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பால் பட்டு உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் செய்யும் நபர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதனை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுத்தி வீட்டடி மனைகளாக மாற்ற கால்வாய்களை மூடும் வேலைகளையும் அரசுக்கு எதிராக செய்து வருகின்றனர். இந்த விவசாய கால்வாய்கள் முறையாக தூர்வராத காரணத்தினால் கடந்த பருவமழை காலத்தின் போது சோழவந்தானில் உள்ள ஒன்னாவது வார்டு பகுதியானபேட்டைகிராமம் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டது. அப்போது நேரில் பார்வையிட வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை வருவாய் துறை அதிகாரிகள் விரைவில் கால்வாய் தூர்வாரப்படும் என்ன பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் உறுதி அளித்து விட்டு சென்ற நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது சில தனியார் ரியல் எஸ்டேட் துறையினர் வாய்க்கால் மண்களை அள்ளி தங்களது விவசாய நிலத்தை நிரப்பி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் ஆகையால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக இந்தப் பகுதியில் ஆய்வு செய்து விவசாய நிலங்கள் பாழ்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!