தமிழகம்

மணிப்பூரில் அமைதி ஏற்படுத்தக் கோரி, மலைமேல் ஆர்ப்பாட்டம்

45views
மணிப்பூர் கலவரத்தில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு காரணமான கயவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஒத்தக்கடை யானை மலை மீது நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பிபைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கினர்.  பின்னர், அவர்களை, நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் யானை மலை மீது ஏறி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு நியமிக்க வேண்டும், மணிப்பூர் அரசு ,  ஆளுநர் ஆகியோரை கண்டித்து நாடாளுமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,  குற்றம் செய்த கயவர்களுக்கு மணிப்பூர் மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!