தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் தற்கொலைகள்

59views
கே .புதூரில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது
கே. புதூரில் இளம்பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர்38 வயது இளம்பெண்.இவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை உணர்ந்தார். உணர்ந்து பார்த்தபோது கே. புதூர் நல்லமணி நகர் மாரியப்பன் மகன் மணிகண்டன் என்பவர் அவரை செல்போனில் படம் எடுத்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் மணிகண்டனை கைது செய்தனர்.
சிலிண்டர் கசிவவு ஏற்பட்டது தெரியாமல்  கொசுவர்த்தி பற்றவைத்த போது தீப்பற்றி ஒருவர் பலி
சிலிண்டர் கசிவு ஏற்பட்டது தெரியாமல் கொசுவர்த்தி பற்றவைத்த போது உடலில் தீப்பற்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ரகுமான் 50 .இவர் வீட்டில் கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இதை இதை அறியாமல் அவர் கொசுவர்த்தியை பற்ற வைக்க முயன்றார். அப்போது கேஸ் தீப்பற்றி உடலில் தீ பிடித்து கருகினார்.இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முஜிபுர்ரஹ்மான் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவர் அம்மா ரஹ்மத் நிஷா மதிச்சியம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து முஷிபுர் ரஹ்மானின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகர் எஸ் எம் பி காலனியில் வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
அண்ணா நகர் எஸ் எம் பி காலனியில் வேலையில்லாத விரக்தியில் இருந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அண்ணா நகர் எஸ் எம் பி காலனியை சேர்ந்தவர் ரகு காளை மகன் காளியப்பன் 30. இவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இதனால் போதிய வருமானம் இன்றி மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கௌசல்யா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பானடியில் வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்கள் கைது
அனுப்பானடியில் குற்றம் செய்யும் நோக்கத்துடன் வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  அனுப்பானடி உப்பு மேட்டு தெருவில் தெப்பக்குளம் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது போலீசை கண்டதும் இரண்டு பேர் ஓடிச் சென்று பதுங்கினர். அவர்களை விரட்டி பிடித்தனர்.பின்னர் போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் ஆளுக்கு ஒரு வாளாக மறைத்து வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேல அனுப்பானடி செல்வராஜ் மகன் சரவணன் என்ற டால்டா சரவணன் 23 ,அனுப்பானடி அய்யனார் கோவில் தெரு கோவிந்தன் மகன் சத்யராஜ் 34 என்று தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு வாலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் வியாபாரத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி  பெண்ணிடம்ரூ 70 லட்சம் 143 பவுன் நகை மோசடி- கணவன் மனைவி ஜோடிகள் நான்கு பேர் கைது.
ஆன்லைன் வர்த்தகத்தில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவதாக கூறி பெண்ணிடம் ரூ 70 லட்சமும் 143 பவுன் தங்க நகையையும் மோசடி செய்த கணவன் மனைவி ஜோடிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஐயர் பங்களா ஸ்ரீ நகரை சேர்ந்தவர் டைட்டஸ் தம்பிந்தன் மனைவி சந்திரா 54. மதுரை கே புதூர் மகாலட்சுமி நகர் முதல் தெருவை சேர்ந்தகணவன் மனைவியான ஜாகிர் உசேன் மனைவி பாத்திமா என்ற ஷமீம் 34. மற்றும் மகாலட்சுமி நகரை சேர்ந்த மற்றொரு கணவன் மனைவியான சுரேஷ் மனைவி பரமேஸ்வரி.இவர்கள் மார்ச்மாதம் சந்திராவிடம் ஆன்லைனில் வியாபாரம் செய்வதாக கூறி ரூபாய் 70 லட்சமும் 144 பவுன் தங்க நகைகளையும் பெற்று மோசடி செய்துள்ளனர். பணம் பெற்று அவருக்கு பங்கு கொடுக்காமல் மோசடி செய்தது பின்னர்தான் அவருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சந்திரா மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்திராவை மோசடி செய்ததாக கணவன் மனைவிகளான ஷாகீர்உசேன் ,மற்றொரு கணவன் மனைவியான சுரேஷ்,அவர்மனைவி பரமேஸ்வரி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!