தமிழகம்

மதுரை சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி.. 10 ஆண்டுகளாக பொறுமை இழந்து காத்திருந்த பொதுமக்கள் – தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்து விட்ட அவலம்

33views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014ல் அதாவது 9 வருடங்களுக்கு முன்பாக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் நடைபெற்று வந்த இந்த ரயில்வே மேம்பால பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வாடிப்பட்டிதாலுகா அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் சோழவந்தான் விரிவாக்க பகுதிகளான பசும்பொன் நகர் டீச்சர்ஸ் காலனி நகரி ஆலங்கட்டாரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு வாசிகள் சோழவந்தான் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 9 வருடங்களாக நடந்து வந்த மேம்பால பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக முடிந்த நிலையில் நிர்வாக காரணங்களால் பாலம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில்.நேற்று முன்தனம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்று ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில் பாலம் திடீரென திறக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேலும் பாலத்தின் முன் பகுதியில் அதிகாரிகள் தடுப்புகளை அமைப்பதும் அதை இரவு நேரங்களில் பொதுமக்கள் அகற்றுவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் பாலம் திடீரென பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை வாடிப்பட்டி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம் அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை ஆனது ரயில்வே கேட்டை தாண்டி செல்ல முடியாத நிலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்ததால் மறைமுகமாக பேரூராட்சி நிர்வாகத்தினரும்.பாலத்தை திறந்து விட்டதில் நிம்மதி அடைந்தனர . மேலும் விரைவில் பாலத்தின் அடியில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!