கடந்த 10 மாதங்களில் சிங்கபூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் 63.766 பயணிகள் மதுரை வருகை
263views
மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 26ம் தேதி வரை 63 ஆயிரத்து எழுநூற்றி அறுபத்து ஆறு வெளிநாட்டு பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களுக்கு சுகத்தாரத்துறை சார்பில் மதுரை விமான நிலைய பரிசோதனை முகாமில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.
பயணிகளின் விகிதாசார அடிப்படையில் 2 ஆயிரத்து 46 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 பயணிகளுக்கு கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரான தொற்று பரவும் அபாயகரமா நாடுகளில் இருந்து வந்த 1 பயணிக்கும். கொரானா தொற்று அபாயமில்லாத நாடுகளில் இருந்து வந்த 30 பயணிகளும் இதில் அடங்குவர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்




