கட்டுரை

புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது

75views
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், எந்த ஒரு சொல் செயலுக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கும். நீங்கள் பார்க்கும் கோணம் வேறு மற்றவர் பார்க்கும் கோணம் வேறு என்ற புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது.
உதாரணமாக parallax என சொல்லப் படும் இந்த கோணமாற்று பயிற்சியை நீங்களே செய்து பாருங்கள் .  நீங்கள் அமைதியாக ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு உங்களுடைய இடது கையால் இடது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். இப்போது வலது கை பெருவிரலை தம்ஸ்அப் என்பதாக நீட்டி உங்கள் வலது கண்முன் வைத்து அந்த பெருவிரலுக்கு நேர் முன்னே இருக்கும் பகுதியை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது, உங்கள் தம்ஸ் அப் வலது கையை சற்றும் அசைக்காமல் அதே இடத்தில் வைத்துக் கொண்டு வலது கண்ணை மூடி இடது கண்ணால் அதைப் பாருங்கள்.
நீங்கள் எதுவும் மாற்றாமலே உங்கள் தம்ஸ் அப் வலது கை சற்றே வேறு பக்கம் நகர்ந்து இருப்பது போல் மாயத் தோற்றம் தரும். இப்படி உங்கள் வலது கண்ணும் இடது கண்ணுமே ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கோணத்தில் ஒரே பொருளை பார்ப்பதை நீங்கள் புரிந்து கொண்டால், மற்றவர்களின் கோணத்தை புரிந்து உங்களால் பிறருடன் பிரச்னை இல்லாமல் செயல் படமுடியும். உறவுகள் மகிழ்ச்சியாய் மலரும்.
Dr.டாக்டர் ஃபஜிலா ஆசாத். வாழ்வியல் மற்றும் மனநல நிபுணர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!