தமிழகம்

ஆசிட் வீச்சு குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!!

200views
முனைவர் என் .பத்ரி

பெண்களின் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை அவர்களால் பாதிக்கப் பெண்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஹாசின் மாலிக் என்ற பெண் மீது கடந்த 2009இல் மர்ம நபர்களால் ஆசிட் வீசப்பட்டது. இதுத் தொடர்பான வழக்கில் ஆசிட் வீசியவர்கள் என அடையாளம் காணப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை டில்லி உயர்நீதிமன்றம் விடுவித்தது.

இதை எதிர்த்து ஹாசின் மாலிக் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஹாசின் மாலிக் தன் வாழ்க்கை 16 ஆண்டுகளை சட்டப் போராட்டத்திற்காக செலவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளது தனக்கு வருத்தத்தை தருவதாகக் கூறியிருந்தார். கடைசி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றத்தின் நாடியுள்ளதாகவும்,உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை விசார்த்த நீதிபதிகள் ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆண்டுவாரியான தரவுகள், விசாரணை அறிக்கைகள், நிலுவையில் உள்ள மேல் முறையிட்டு வழக்குகளின் நிலை, பாதிக்கப்பட்டவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமண நிலை, மருத்துவ சிகிச்சை, மாநிலத்தால் செய்யப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட செலவுகள் போன்ற விரிவான தகவல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை முழுமையாக பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிப்பது குறித்து இந்தநீதிமன்றம் ஆலோசிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
.
ஆசிட் வீச்சு பாதிப்பு என்பது வரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணங்களுக்கு இணையானது ஆகும். எனவே அதற்கு ஈடான தண்டனையை குற்றவாளிகளுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும்,விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!