தமிழகம்

கோவையில் தமிழர் சமய மறுமலர்ச்சி மாநாட்டில் தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் பங்கேற்பு.

19views
கடந்த கார்த்திகை 29,30 (14, 15/12/2024) சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் தமிழ்நெறி சித்தர் தவத்திரு மூங்கிலடியார் அவர்களின் தலைமையில் கோவை மாநகரில் மிகச் சிறப்பாக தமிழர்-( இந்து) சமய மறுமலர்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
இதில் அருள்திரு பேரூராதினம் ஐயா மருதாசல அடிகளார் உட்பட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்க.. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் செந்தமிழ் வேள்வி சதுரர் முனைவர் மு பெ சத்திய வேல் முருகனார், ஐயா வழி குரு பாலபிரசாபதி அடிகளார் போன்ற தமிழ் நெறியாளர் பெருமக்கள் பங்கேற்க.. அதன் தொடக்க நாள் நிகழ்ச்சியில் தமிழர் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் கலந்து கொண்டு, சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை மிகச் செம்மையாக்க சித்தர் பூதகணநாதர், நாவல்மரத்தடியார் சித்தர், சித்தரடியான் செ திருக்குமரன் போன்றோர் வழிநடத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!