தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ உடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர், நகர நிர்வாகிகள் சந்திப்பு.

49views
“ஆங்கூர் ராவுத்தர்” பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆவணங்களில் “ஆ.ரா”என்பதை மாற்றி “ஆங்கூர் ராவுத்தர் ” என முழு பெயரையும் பதிவு செய்ய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் மற்றும் கம்பம் நகர நிர்வாகிகள் சார்பாக கோரிக்கை மனு வழங்கபட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் அருமை மாமா நா.இராமகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்களை அவரது கம்பம் இல்லத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அராபத் அவர்கள் தலைமையில், கம்பம் நகர செயலாளர் சாகுல், நகர பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், நகர துணை சிராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.
“கம்பத்தில் பெண் குழந்தைகள் சிரமம் இல்லாமல் கல்வியை தொடர “ஆங்கூர் ராவுத்தர்” அவர்கள் அரசுக்கு இடத்தை தானமாக கொடுத்து அந்த இடத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.அது காலம் காலமாக “ஆங்கூர் ராவுத்தர்” அவர்களின் வரலாறை சொல்லும் அளவுக்கு அந்த பள்ளியின் பெயர் “ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி” என இருந்து வருகிறது.
சில காலமாக “ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி” என்பது ஆ.ரா. என சுருக்கி ஏ.ஆர். என பள்ளி மூலமாக பதிவு செய்யபட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது.  இது வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் செயலாகும் இது குறித்து ஏற்கெனவே இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும்,இதே போல் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி சார்பாகவும் ,புது பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி சார்பாகவும் பள்ளி கல்வி துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் கோரிக்கை மனு ஒன்றும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் லாவண்யா அவர்கள் விசாரணை செய்து பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இடத்தில் தகவல் கொடுத்து அதற்கு பின்னர் பள்ளியில் வெளிபடையாக உள்ள சுவர் பகுதிகளில் பள்ளி சுற்றி உள்ள பகுதிகளில் “ஆ.ரா” என சுருக்கி குறிபிட்ட அனைத்து பகுதிகளிலும் “ஆங்கூர் ராவுத்தர்” என பதிவு செய்யப்பட்டது.
ஆனால் பள்ளியில் உள்ள ஆவணங்கள், சீல், தலைமை ஆசிரியர் ஆவணங்கள், ஆசிரியர்கள் ஆவணங்கள், மாணவர்கள் ஆவணங்கள், மாணவர்களுக்கு கொடுக்கும் நோட் புக், மற்றும் மாணவர்கள் சான்றிதழ்களில் இன்னும் ஆ.ரா என குறிப்பிடப்பட்டு வருகிறது அதை மாற்ற நடவடிக்கை பள்ளி கல்வி துறை எடுப்பதாக கூறி தற்போது டிச.14 வரை எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.  மேலும் கடந்த வாரம் பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டும் உள்ளது.
அதிலும் “ஆ.ரா” என பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டும் உள்ளது, பெயரை சுருக்கி போட்டது குறித்து இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்துவரும் வேளையில், பள்ளி தலைமை ஆசிரியரே நேரில் சென்று அதை பெற்று உள்ளார் என்பது வரலாற்றை ஏன் மூடிமறைக்க வேண்டுமென்ற ஒரு கொள்கையோடு களம் கண்டு வரும் எங்களுக்கு மிகுந்த வேதனை அளித்து வருவதாகவும்,  இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கூர் ராவுத்தர் அவர்களின் வரலாறை மறைக்கும் செயலாக உள்ளதை கம்பம் எம்எல்ஏ அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று இதற்கான உடனடி நடவடிக்கை எடுத்து ,பள்ளியில் உள்ள ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களில் பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆ.ரா என்பதை நீக்கம் செய்து “ஆங்கூர் ராவுத்தர்” என முழு பெயரையும் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கம்பம் எம்எல்ஏ அவர்களிடத்தில் எடுத்து கூறி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!