தமிழகம்

கூடங்குளம் அணு மின் உலை மின்சார தயாரிப்பிற்கு தேவைக்கான யுரேனியம் ரஷ்யாவில் இருந்து பகல் 12.40 மணியளவில் மதுரை வந்தடைந்தது

71views
மதுரை வந்தடைந்த ரஷ்ய விமானத்திலிருந்து 30 டன் யுரேனியம் பாதுகாப்பாக 4 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு கூடங்குளம் புறப்பட்டது.
யுரேனியம் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லாரிகளுக்கு பாதுகாப்பாக துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு மின் உலைக்கு தேவையான (எரிபொருள்) யுரேனியம் ரஷ்யாவில் இருந்து விமான மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது.  இங்கிருந்து கன்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு யுரேனியம் கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டது. துணை ராணுவம், போலீஸார் அதன் பாதுகாப்பு வாகனங்கள் வழிகாட்டுதலின் படி கண்டெய்னர் லாரிகள் புறப்பட்டு கூடங்குளம் செல்ல தயாராகி வருகிறது.
அணுமின் உலைக்கு தேவையான யுரேனியம் தற்போது (30 டன்) முப்பது டன் எடை அளவில் விமான மூலம் ரஷ்யாவில் இருந்து மதுரை வந்தடைந்தது.
மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஏற்றி கூடங்குளம் அனுப்பி வைக்கப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!