தமிழகம்

காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் M.அப்துல் ரஹ்மான் Ex MP ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் ஹாபிஸ் V.M.T முஹம்மது ஹசன் இல்லத் திருமணத்தில் பங்கேற்பு. சமுதாயப்பிரமுகர்கள் சந்திப்பு; முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வரவேற்பு

12views
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் எக்ஸ் எம் பி அவர்கள் 24.12.2024 அன்று ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் காயல்பட்டினம் ஹாபிஸ் V.M.T முஹம்மது ஹசன் புதல்வர் ஹாபிஸ் V.M.H முஹியித்தீன் முபாரக் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வருகை புரிந்தார்.
காலை வாவு வஜீஹா வனிதயர் கலை அறிவியல் கல்லூரியில் அதன் தலைவர் வாவு செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது கல்லூரியின் செயலாளர் அல்ஹாபில் வாவு இஸ்ஹாக் உடன் இருந்தார்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாவு சித்தீக் ஹாஜியாரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகி வாவு சம்சுதீன் உடன் இருந்தார்.
பகல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் இல்லத்திற்கு வருகைபுரிந்த அவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் கே. எஸ். முத்து முஹம்மது ஆலிம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவுலியா அப்துல் ரஷீத் உள்ளிட்ட நகரப் பிரமுகர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதனைத் தொடர்ந்து பி. ஜி. ஆர். ரிசார்ட்ஸில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் மஹ்முதுல் ஹசன், தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் நவ்ரங் சகாப்தின், மாவட்டத் துணைச் செயலாளர் முகமது உவைஸ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முகமது சுலைமான் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் துணைத்தலைவர் சாகுல் சிராஜுதீன் ஆகியோர் சந்தித்து வரவேற்று, நலம் விசாரித்தனர்.

மாலை ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை நிர்வாகி அல்ஹாபிழ் வி. எம். டி முஹம்மது ஹசன் புதல்வர் திருமணத்தில் பங்கேற்றார்.
அங்கு திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி அவர்கள் வரவேற்றார்.
பின்னர் மகழராவில் நடைபெற்ற திருமண விழாவில் எம். அப்துல் ரஹ்மான் Ex MP வாழ்த்துரை வழங்கினார். மாநிலச் செயலாளர் காயல் மகபூப் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஹாபிஸ் எஸ்.கே ஷாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார் .

இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோம்பை நிஜாமுதீன், முஸ்லிம் யூத் லீக் மாநில முதன்மை துணை தலைவர் நயினார் முகம்மது கடாபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர், செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, காயல்பட்டினம் நகரச்செயலாளர் ஏஎல்எஸ் அபூசாலிஹ், திருநெல்வேலி நகர தலைவர் குலாம் மைதீன், நகர செயலாளர் கௌது ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!