18views
கொஞ்சக் கொஞ்சக் கொஞ்சணும் கொஞ்ச..
கொஞ்சிக் கொஞ்சி மகிழணும் கொஞ்ச
இருப் பதை எல்லாம் எடுத்து கொஞ்சணும் கொஞ்ச
இயற்கை வாழ இருக்கணும் கொஞ்சக் கொஞ்ச..
அறிவும் கொஞ்ச.. ஆக்கமும் கொஞ்ச..
அடைக்கலம் ஆகி கொஞ்சணும் கொஞ்ச!
தெளிவு கொஞ்சம் திறமையும் கொஞ்சம்
சேர்ந்து நிற்க வாழணும் வரவுகள் கொஞ்ச..
தமிழும் கொஞ்ச.. தக்கன வெல்லாம் கொஞ்சக் கொஞ்ச
தலை நிமிர்வாகி உலகில் உயர்ந்தோர் எல்லாம் கொஞ்ச!
ஊரும் கொஞ்ச உற்றார் உறவுகள் கொஞ்ச
உரிமைகள் நிமிர்ந்து உணர்வுகள் வாழ்த்தி கொஞ்ச
பலவுமாகி பயின்றன கொஞ்சக் கொஞ்ச..
பகைகள் ஓய்ந்து நம் பழக்கங்கள் நின்று கொஞ்ச!.
உலகில் ஓடிய தமிழர் சிறந்து உயரக் கொஞ்ச
உறவாய் யாரும் மகிழ்ந்து மதித்து கொஞ்ச!
ஆட்டம் பாட்டும் ஆடநம் கலைகள் நிலைத்துக் கொஞ்ச
ஆய்ந்த புலவர் அறவுரை வாழ்ந்து புகழாய் கொஞ்ச..
ஏரும் உழவும் செழிப்பென இருக்க மண்ணே கொஞ்ச
இணைக்கும் தொழில்கள் நம்மை ஏற்றிக் கொஞ்ச..
எங்கள் நாடு இன்தமிழ் நாடு உயர்ந்து கொஞ்ச
எழில்மிகு வளங்கள் கடலென ஆடி மண்ணைக் கொஞ்ச…
வாழும் நாளை வருடங்களாக்கி காலம் கொஞ்ச!
வாழ்க! எனவே வளமார் நலங்கள் வைப்பில் கொஞ்ச
இருக்க வந்திடும் சித்திரை முதல்நாள் அதனை கொஞ்ச
ஏற்றி மகிழ கொடிகள் யேற்றி வளர்நாள் கொஞ்ச
குழப்பங்கள் நீங்கி குதித்து சேர்ந்து தமிழர் கொஞ்ச
கொடும் பகை வீழ்ந்திட குடிகளாக தமிழர் வணங்கிக் கொஞ்ச
வருக! வருக! எனவே நாமும் வாழ்த்தி வழிய கொஞ்ச..
வரும் தமிழ்ப் புத்தாண்டு வெற்றிகளோடு வைப்பென கொஞ்சுக கொஞ்ச!.
வாழ்த்துகளுடன்,
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.
add a comment