கவிதை

1930 – உடனடி அதிரடி ஹீரோ

9views
பணம் காசு பரிசு தருவாங்கன்னு
கேட்கின்ற விபரங்களை கொடுத்து விடாதே
ஒரு பைசா ஒருத்தனுக்கு இலவசமா
எவன் கொடுப்பான் எதுக்கு கொடுப்பான்
தப்பேதும் செஞ்சதாக மிரட்டல்கள் வந்தாலே
பயந்துகிட்டு பணம் எதுவும் அனுப்பி விடாதே
நல்லவனா நீயிருக்க அபராதம் கட்டச் சொல்லி
எவன் கேட்பான் எதுக்கு கேட்பான்?
வலைதள வாழ்க்கையில் சூழ்ச்சிகள் இருக்குது
வளரும் தொழில்நுட்பத்தில் ஆபத்தும் இருக்குது
பேராசை பெரு நஷ்டம் மீள்வது மிகக் கஷ்டம்
புரிஞ்சுக்கோ நல்லா தெரிஞ்சுக்கோ முழுசா அறிஞ்சுக்கோ
ஒன் நைன் திரீ ஜீரோ
நம்மை காக்கும் உடனடி அதிரடி ஹீரோ
பத்தொன்பது முப்பது நம்மை பாதுகாக்க வந்தது
பத்தென்பது முப்பது பணத்தை பாதுகாத்து வைப்பது
Dr. R. சிவகுமார் IPS.,
காவல் கண்காணிப்பாளர்
சிலை திருட்டு தடுப்பு பிரிவு

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!