211views
(கலிவிருத்தம்)
காதலில் கனிந்த குருவிகள் இரண்டு
மோதலு மற்ற மகத்துவ வாழ்வு!
நூதனக் கூட்டை நுட்பமாய்க் கட்டி
சோதனை யிலுமே கண்ணியம் தவறா!
துதிக்கையை உயர்த்தி தலையிலே வைத்து
மதியையும் தீட்டி களிறுகள் பிடிகள்
இதயமே நடுங்கும் இடியொலி எழுப்பி
எதிரியை துரத்தும் கண்ணியம் மாறா
பெண்களை ஆண்கள் பண்பினால் அணைத்துக்
கண்டதும் கொண்டக் காதலைப் புரிந்து
கண்ணியத் துடனே கருத்துடன் பழகி
எண்ணில டங்கா எண்ணமே தவிர்த்து
சொல்லிலே இனிப்புச் சுவையினை சேர்த்து
சொல்லினால் பொறித்த கவிநடை அறிவை
நல்லவன் கற்பான் நயமுடன் தானே
வல்லவன் ஆவான் வியக்குமே உலகு!
– கீதா
வாய்பாடு :
விளம் – மா – விளம் – மா
பொருள் :
களிறு- ஆண் யானை
பிடி- பெண் யானை
add a comment