10
அப்பா உங்கள் உழைப்போ.. அதிகம்
அம்மா உங்கள் அன்போ.. அதிகம்
அண்ணா உங்கள் பாசம்.. அதிகம்
அக்கா உங்கள் பரிவும் அதிகம்.. அதிகம்!
தங்கை உனக்கோ கனவுகள் அதிகம்..
தம்பி உனக்கோ காட்சிகள் அதிகம்..,
ஊரே உனக்கு உறவுகள் அதிகம்..
உன்னை சுற்றி கோயில்கள் அதிகம்..
ஆறே உனக்கு பாய்ச்சல்கள் அதிகம்
ஆடுகள் மேய்க்க புல்வெளி அதிகம்
ஏரிகள் நிறைய வயல்வெளி அதிகம்
ஏறும் மலைமேல் மரங்கள் அதிகம்!
ஆயா உன் பேச்சில் பூசணை அதிகம்
அண்டை அன்பை நினைத்தால் சுகமோ அதிகம்!
உறவுகள் சொல்ல கற்றது அதிகம்
உறங்கி விழிக்க கேட்டது அதிகம்
ஓடி ஆடிட விளைத்தது அதிகம்
உலகம் அறிய நினைத்தது அதிகம்..
காலை எழுந்தால் புத்தகமாய்..
கடன்கள் கழித்து உண்ணலுமாய்..
ஆடைகள் உடுத்தி ஆளுமையாய்..
அடைவோம் பள்ளி புகலிடமாய்!
ஓடி யாடிட விளையாட்டு..
ஓய்ந்திட்ட நேரத்தில் உணவூட்டி..
படிப்போம் பள்ளியில் தமிழேற்றி..
பாடுவோம் பாட்டு இசைபோட்டு!
இரவென வந்தால் நிலவோடு
இனிப்பென கண்டால் சுவைப்போடு
அழகென நின்றால் மயிலோடும்..
அறிவென நடந்தால் மகிழ்வோடும்!.
சிந்திக்க வேண்டி கதை பேசும்
சிறப்புகள் தூண்டிட விடை பேச்சும்
அன்புடன் அடைவோம் ஊர் பேச
ஆடிட கூடி விளையாட..
சிரிப்பும் களிப்பும் தாலாட்ட
தென்றல் பேசும் கருத்தூட்ட
ஆடுகள் கத்தும் குழலிடையே..
நாய்கள் குரைக்கும் நெருக்கடியில்
மாடும் கன்றுமாய் கொட்டடியில்
மகிழ எழுவோம் காலை விடியலிலே!.
கரைந்திட பறக்கும் காக்கைகளும்
காற்றில் பறக்கும் பல சிந்தும்
ஏறி இறைப்போர் கிணற்றினிலே..
இருந்து வெளுக்கும் சூரியன் இடை
ஓய்வுகள் ஏது எங்களுக்கு!..
உழவுகள் நடக்கும் பாட்டோடு..
தமிழர் நாட்டின் வாய்ப்பாடு!
தங்கத் தமிழர் வழிபாடு!
எங்கும் எங்குமாய் இசை முழங்க..
எல்லா நாளும் திருப்புகழே!
பாவலர் மு இராமச்சந்திரன்,
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.
add a comment