58
உவகையின் உயிரறுந்து
அந்தரத்தில் தொங்கும்
நடுராத்திரிப் பிணம் வாழ்வு
முக்கிச் சொட்டும் மூத்திரத்தின்
இறுதித் துளிதான்
என் பசும்பச்சைக் காலம்
உறிஞ்சி செறித்துத் தள்ளிய
கசடென கணக்கிறது
ஜீரணமாகாத சில நினைவுகள்
ரணமான மனதிற்கு
கண்ணீரைக் களிம்பிடுவதால்
மரத்துப்போகுமா வலி ?
துரோகத்தின் துர்நாற்றதில்
அனிச்சம் பூ அன்பை
முண்டமாய் துடிக்கவிட்டுவிட்டு
கண்மூடிய புத்தனின்
சரிந்த சிரம்போல சிரிக்கிறது
என் நரம்பறுந்த நம்பிக்கை
நிகழ்பாரதி
add a comment