கவிதை

பொங்கலோ பொங்கல்

103views
சூரியனை எழுப்புகின்ற சூரியன்
கடிகாரத்தில் வீரியன்
வெற்று உடலால் உழவன் உழைப்பான்
உழவனின் உழைப்பை போற்றும் பெருநாள்.
ஏலே ஏலே ஏலே ஏலே
இந்த பாட்டு இனிதாய் மலரும்.
பானையிலே பொங்கிலிட்டு.
நெய் ஊற்றி
இறைவனை வணங்கிடுவோம்
தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்.
உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
உழவனை போற்ற பிறந்த நாள் விழா.
உழைத்திடு உழைத்திடு வெற்றி யை பெற்றிடு.
மண்ணிலே புதிதாய் தோன்றியது.
மனகமலும் பானை பல வண்ணங்களோடு.
மஞ்சள் பூசி மாமரத்து இலையோடு.
இஞ்சி தண்டோடு கரும்போடு.
பொங்கியது புதுப்பானை வண்ண வண்ண கோலமிட்டு
விடியலை காணும் கதிரவனை வழிபட்டு.
பால் பொங்க
மகிழ்ச்சி பொங்க
கதிரவனை போற்றும் திருவிழா.
வணங்குவோம் இறைவனை
பேராசிரியர் கவிஞர் பு.மகேந்திரன்

1 Comment

  1. நல்ல அருமையான கவிதை….
    உங்கள் கவிதைகளில் இது புதுவிதம் படிப்பதற்கு மிகவும் சுவை தரும். .மகேந்திரன் அவர்களை நாம் வாழ்த்தலாம்……
    பேராசிரியர் வெ நீலமேகம்…..

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!