36
பாரதத்தில் மனிதநேயம்
பகுத்தறிவோடு மலரட்டும்
ஜனநாயக புத்தாண்டு
ஜனங்களிடம் சிறக்கட்டும்
ஆளுகின்ற பொறுப்பாளியின்
அதிகாரம் விலகட்டும்
ஒரேநாடு ஒரேமொழி
ஒவ்வாமை ஒழியட்டும்
பதில்கள் தெரியாத
பச்சோந்திகள் புதையட்டும்
சாசனசட்டத்தை திருத்தும்
சங்கிகள் மறையட்டும்
கல்வி செல்வத்தால்
காசவில் நுழையட்டும்
பூரண மதுவிலக்கு
புண்ணியமாய் இருக்கட்டும்
கூட்டாச்சி தத்துவம்
குதூகலமாய் குலுங்கட்டும்
இந்தியாவின் முன்னேற்றம்
இளைஞனிடம் பெறுகட்டும்
விவசாயத் தொழிலுக்கு
விடிவுகாலம் பிறக்கட்டும்
நாளுக்குநாள் கலவரங்கள்
நடப்பதை தடுக்கட்டும்
சர்வாதிகார ஆட்சியில்
சமாதானம் பிறக்கட்டும்
அகிலம் முழுவதும்
அமைதி நிலவட்டும்…!
அபிவிருத்திஸ்வரம் தாஜ்.நியாஜ் அஹமது
துபாய்
add a comment