கவிதை

பாலன் பிறப்பும் பாவத் துறப்பும்

12views
அது
பேரிறைவன் அற்புதத்தின் பெருங்கருணை…
கன்னி மரியாளுக்கானது கருத்தன் பரிசானது…
தந்து சொன்னது
கண்ணியம் ஆனது
“அவர் என் வார்த்தையாய் இருக்கிறார்… “
கண்ணியமாக்கப்
பட்டது
இறைத்தூதர் அத்தாட்சி…
அவதூறு பேசிய
அக்கம் பக்கத்தார் வாய்களை அந்தக் குழந்தையின்
அற்புதமான மொழிவீச்சுதான் மூடியது …
நீண்டு நடந்த பிரார்த்தனைகள் நிமிடங்களுக்குள் கிடைத்தன…
நிம்மதி தரும் கனிக்குலைகள் பாலாற்று நீர் …
பசியாறி மகிழ்ந்தார் அன்னை …
பாவங்கள் இல்லாத அன்னை …
பாவங்கள் இல்லாத பிள்ளை ….
பாவங்கள் செய்தாலும் மன்னிப்பு கேட்கையில் மன்னித்து விடும் பேரிறை…
உலக ஆசாபாசங்களில் சிக்காத மெய்ஞ்ஞான பாசம்…
புதுமைகளில் என்றாலும் பழமையின் ஏகத்துவம் பேசும் வேதத்தின் பாடம்…
ஏகம் சொல்ல வந்த வேதம்… இறை ஒருவனையே ஏற்றி வைத்த நீதம் …
மாமன்னர் சாலமன் …
தவயோகர் ஆபிரகாம் வழியில்…
இறுதித் தூதர்
முஹம்மது நபிகளை
இறுதியாக முன்னறிவிக்கும் முன் தூதராக…
இடக் கன்னத்தில் அடித்தால் வலக்கன்னத்தையும் காட்டு
உன் சகோதரனை
ஒரு நாளைக்கு எழுபது
முறையேனும் மன்னித்துவிடு…
உண்ணுவதுபோல்
உண்ணக் கொடு…
உடுத்துவது போல
உடுத்தக் கொடு …
அடுத்தவன் துன்பத்திலும் அக்கறை கொள்…
வருந்திப் பாரமும்
பாவமும் சுமக்காமல்
திருந்தி வாழ
வழி சொன்னவர்…
காலங்கள் மாறினாலும் வேதத்தின் தீபங்கள் ஒன்றுதான்…
வெளிச்சங்கள் எல்லோருக்கும் ஒன்றுதான்…
விடியல்களும் மன்னிப்புகளும் பொதுவானவைதான்
சுவன முற்றங்கள்
திறக்கும் போதெல்லாம்
பாவங்கள் மங்குகின்றன…
தேவ கிருபைகள் பொங்குகின்றன…
அத்தாவுல்லா,
நாகர்கோவில்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!