கவிதை

நதிநீரில் அளாவிய கால்கள்

65views
சலசலத்து ஓடும்
இசைக்கு ஞானம் தந்தது
உன் கொலுசு
தாளத்தை வெட்கமுற
செய்யும் சினுங்களில்
யாவும் வசப்படும்
சிட்டுக் குருவிகள்
குலவையிடுவதும்
சில் வண்டுகள் குதுகலிப்பதும்
பாதம் பார்த்து நடந்தது
கூழாங்கற்களைப் பூப்படையச் செய்தது
நதிநீரில் அளாவிய கால்கள் ….
யாழ் ராகவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!