கவிதை

மழைப் பிரியை

17views
*மழை வரும் போதெல்லாம்
தவறாமல் வந்துவிடுகின்றது
உந்தன் ஞாபகம்
நேற்று எனது ஊரில் மழை
*மழைக்கவிதை கேட்டு
நீ அடம்பிடித்த நாளில்தான்
துளிகளுக்கெல்லாம்
சிறகு முளைத்திருந்தது
*வெவ்வேறு திசையிலிருந்தோம்
நாம் இருவரும்
மழை தான் நம்மை
இணைத்திருந்தது….
* மழை நாளில்தான்
பேசவும் தொடங்கினாய்
மழை நாளில் தான்
பிரிந்தும் செல்கின்றாய்
*நீ வருவாயென
நம்பிக்கையிருக்கின்றது
மழைக்காலம் இன்னமும்
முடிந்துவிடவில்லை
கூடல்தாரிக்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!