கவிதை

அழகு என்பது…

154views
அழகு என்பது
நான் பேசுவது எல்லாம் அழகு தான்
நான் நினைக்கின்ற வார்த்தைகள் அழகு தான்
பூவாய் மலர்ந்தாய்
புன்னகை அழகு தான்
காதலிக்கு காதலன் அழகு
கணவருக்கு மனைவி அழகு
இயற்கைக்கு மழை அழகு
இனிய சொற்களுக்கு கவிதை அழகு
தாய் தந்தையை வணங்கிடு
குடும்பத்தை நடத்திடு
அதுவும் அழகு தான்
பாடம் எழுதுவது கவிஞனுக்கு அழகு
பாடம் படிப்பது மாணவனுக்கு அழகு
தம்பதியர்களுக்கு சுற்றுலா செல்வது அழகு
குற்றால அருவியில் குளிப்பது அழகு
குடும்பத்தில் மகிழ்ச்சியாய் இருப்பது அழுகு
அறிஞர்களுக்கு இலக்கிய ஆர்வம் அழகு
அன்னைக்கு ஈன்ற தன்மகன் அழகு
எல்லாமே அழகு தான்
அழகு அழகு அழகு
அறிவு ஆற்றலோடு வாழ்வது அழகு
அனைவர் மேல் பாசம் வைப்பது அழகு தான்
பேராசிரியர் கவிஞர். பு.மகேந்திரன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!