கவிதை

வரப்போவதில்லை வேறொரு விரல்

71views
எவ்வளவு தான் கண்ணீர் விட்டு கதறி அழுதாலும்
கடைசி வரையிலும் கண்ணீர் துடைக்க
உன் விரலன்றி வேறொரு விரல்
வரப்போவதில்லை…
பின், எதற்காக இந்த கண்ணீர்?
யாருக்காக இந்த அழுகை?
கண்ணீர் அல்ல நம் ஆயுதம்
தைரியத்துடன் தன்னம்பிக்கையை ஏந்தி திமிருடன் நடை போடு…
கவலை இருந்தால் என்ன?
காசா பணமா சத்தமாக சிரித்து விடு…
நேர்மறை எண்ணங்களை விதைத்தால்
நேர்மறை வெற்றிகளையே அறுவடை செய்ய
இந்த பிரபஞ்சமே தயாராகும்!
உன்னை உனக்கே அறிமுகப்படுத்த
சில துரோகங்களும்,
சில ஏமாற்றங்களும்,
சில அவமானங்கள்
கொஞ்சம் கூடுதலாகவே தேவைப்படுகிறது…
இது உன் வாழ்வு,
யாரையும் கவர முயற்சிக்காமல்,
கவலை பட நேரத்தை செலவிடாமல் ,
உனக்கு பிடித்ததை செய்…
பிடித்தவர்களுக்கு பிடிக்கட்டும்
பிடிக்காதவர்கள் வழி விடட்டும்…
புன்னகை என்ற ஒப்பனையை
அதீதமாய் இட்டு அதிலும் வெற்றி நடை போடு…
ரீனா ஸ்ரீ

1 Comment

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!