74
எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ
மங்கைவி யந்துறை பற்றியோ நீர்
பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில்
புறத்தில் ஈறீறு நூற்றிலும்
பத்தில் ஒன்று சேரிலும்-உமக்காய்
படைத்தாய் நெடுங்கடுங்கோ சேரனன்
“தண் பொருநைப் புணர்பாயும்
வின் பொருபுகழ், விறல் வஞ்சி”-என்றோ
புகழுரைக் கடந்தாய் அழல் தாமரையே
ஏறைக்கோன்பெரு மையாய்கோடல்சூடி
குரலைப் புலியாக மற்பொரு தலையில்
சுமத்தினாய்
குறிஞ்சியின் நாட்டுடை தன்மை செழிக்கும்
நின் நாமத்தில் மகளே
(குறிப்பு: பேய்மகள் இள எயினி சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் புறநானூறு 11 ஆம் பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. அதில் இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் கொடைப் பெருமையைப் பாராட்டியுள்ளார். இவர் பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர்.)
தமிழரசி சிவசங்கர்
add a comment