89
சுகவனே சண்முகனே ஸ்கந்தகுரு நாயகனே
கலியுக வரதனே, புவன சுந்தரனே
தெய்வங்கள் உனைப் போற்றிடும் தண்டாயுத என் ஜோதியே
உலகாலும் ஆதிசிவனின் புதல்வனே
புவனேஸ்வரியின் மைந்தனே
நின் நாமத்தை முருகா என்று சொல்வதே நான் செய்யும் தவமாகும்
முருகா முருகா என மூச்சை விட்டுடுவேன்
வேதங்கள் போற்றிடும் எங்குரு நாதனை
மனதார நம்பியே பயமின்றி ஆனேனே
தேவர்கள் காக்க வந்த வீரனே
தாயும் கொடுத்த தைரியத்திலும் வீர வேலையையும் கொண்டு ஜெயித்திடவே
திருச்செந்தூரை ஆளுகின்றவனே
காவலாக நின்று பெரும் சினந்தணிந்து
இங்கு தணிகை மலையில் நீ என் கண்குளிர நின்றாய் ஐயா
நீ உனைத்தேடி வரும் அடியர்களின் தேவைகளை கொடுத்தருளும் ஞானகுரு தேவன் தானோ
உன்னை துதிக்கின்ற நொடியெல்லாம் இனிக்கின்ற இதயம் தனை கொடுக்கின்ற வீரவேலன்
எக்குறையும் இல்லாமல் குலம் காத்து எப்பொழுதும் எனைக்காக்கும் என் தெய்வம் நீ
மலைதோறும் உனக்கு அபிஷேகம் ஆராதனை இருந்தாலும்
நீ என் மனக்குடிலில் வந்து அமருவாய்
உனக்காக என் வாழ்வை கனிவோடு வாழ்வதே என் வரமெனவே நினைக்கின்றேன் நான்
சூரனை அழித்து நீ காணும் வாகை இவ்வுலகமே கண்டதையா
தேடிவந்த பகையாவும் திசைமாறிப் போகச் செய்த எனை ஆளும் செந்தில்குமரா
உனக்காக வேண்டுமே தரணியிலே நானுமே வாழ்கின்ற வாழ்வுதனை…
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
முருகா…முருகா…முருகா…..
தமிழரசி சிவசங்கர்
add a comment