128
உன்னிலுள் சில திருத்தங்கள் செய்து உள்ளில் வாழும் பெண்மையை உலகிற்கு மென்மையாய் வெளிப்படுத்துபவளே..!!!
அவனென அவளென உனையும் அவர்களென மதித்திட அவலங்களை மிதித்திட துணிந்திடு..
அரிதாரம் கலைத்திடு உனதவதாரம் தருத்திடு
பெண்ணென பேதமையை
ஆண்னெனும்
தோழமையுடன் தோள் கொண்டு
புறப்படு..
கைத்தடி கைத்தட்டி உனதிருப்பை உலகிற்கு
உணர்த்திடும்
நீ
பந்தினைத் தட்டித் தட்டி கொடுத்திடு…
வல்லினமல்ல மெல்லினமல்ல
இடையில் நின்று சமத்துவம் பேசும்
இடையினம் நீ
உனக்கென தனியிடம் உண்டு தனித்திருந்து
துணிந்திருந்திடு
அலங்கரிக்காதே உனக்கென
அங்கீகரித்திட…
பிரம்மன் வரைந்திட்டு
முடிக்க முடியா ஓவியம் நீ..
திரையில் சிறை காணாதே
உனதுறையில் நிலை காணு..
எந்தக் கைகளும் தட்டிக் கொடுத்திடாது கைதட்டிடு பந்தினை கொண்டு..
நானே தந்தை நானே தாய்
உனக்கென ஈருடல் இணைந்தேன் மகவே….
தமிழரசி சிவசங்கர்
add a comment